
சமீபத்தில் சினிமா தரகர்கள் இருவர் கந்தசாமி படத்தை பற்றி பேசிக்கொண்டிருப்பதை கேட்க நேர்ந்தது.
கந்த சாமி படத்தின் கதையும் விவாதிக்கப்பட்டது.
அதைக்கேட்டபோது கந்தசாமி நிச்சயம் மாபெரும் வெற்றியடையும் என்று தோன்றுகிறது!
கதையின் கரு இருப்பவனிடம் எடுத்து இல்லாதவனுக்கு கொடுப்பது என்பது தான்.
அதில் இந்தப்படம் வித்தியாசமாக செய்துள்ளார்களாம்.
கதாநாயகன் ஒரு வருமானவரி அதிகாரி.
கணக்கில் காட்டாத பணத்தை பதுக்கியிருக்கும் பணமுதலைகளின் வீடுகளுக்கு ரெய்டு போகும்போது ஒழித்து வைத்திருக்கும் பணத்தை தெரிந்து கொண்டுவந்து
இரவில் மாறுவேசத்தில் சென்று கொள்ளையடித்து வந்து ஏழைகளுக்கு உதவுகிறான்.
அதுவும் சோம்பேறிகளுக்கு இல்லாமல் நிஜமாகவே கஷ்டப்படும் மக்களுக்கு உதவுகிறான்.
அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்களை கண்டுபிடித்து அவர்களுக்கு வசதி செய்து தருகிறான்.
இதுதான் கந்தசாமி படத்தின் கதை களம்.
நிச்சய வெற்றி கந்தசாமிக்கு உண்டு .
இதே மாதிரி இதற்க்கு முன் குரு,ஜென்டில்மேன்,போன்ற படங்களும் ஜெயம் ரவி இப்போது நடிக்கும் கிக் படத்தின் கதைக்களமும் ஒன்றுதான்
இவை எப்போதும் நம் மக்களுக்கு மட்டுமல்லாது உலக மக்களுக்கே பிடிக்கும்.
மேற்க்கத்திய உதாரணம் மாஸ்க் ஆப் ஜெரோ ,ராபின் ஹூட் போன்ற படங்கள்.
மேலும் கந்தசாமி படத்தின் பாடல்கள் ஷங்கர் படங்களின் பிரமாண்டத்தையும் விஞ்சி விட்டதாம்.
முக்கியமாக மெக்சிகோ விலும்,தென் ஆப்பிரிக்காவிலும் எடுக்கப்பட்ட சண்டைகாட்சிகள் பார்த்து எந்திரன் படகுழுவினரே அசந்து போயிருக்கிரார்கலாம்.
கந்தசாமியால் எந்திரன் படத்தின் பட்ஜெட் நூற்றி என்பது கோடிகளை தாண்டிவிட்டதாம்.
கந்த சாமி மாபெரும் வெற்றியடைய வாழ்த்துங்கள் நண்பர்களே!
No comments:
Post a Comment